புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2014

ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக சாட்சியுடன் ஜே.வி.பி முறைப்பாடு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக சாட்சியுடன் ஜே.வி.பி கட்சி முறைப்பாடு ஒன்றை செய்யத் தீர்மானித்துள்ளது.
நாட்டின் தேர்தல் சட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையாக மீறி வருவதாக கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது அரச சொத்துக்களும் அரச உழியர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான முழு விபரங்கள் அடங்கிய பூரண ஆவணமொன்றும் முறைப்பாடு ஒன்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள்,  வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வளங்களும் சொத்துக்களும்
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளையும் உள்ளடக்கி முறைப்பாடு செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

ad

ad