-

10 ஜன., 2015

பிரான்ஸ் உணவகத்தில் குண்டுவெடிப்பு; 24 மணி நேரத்தில் மூன்றாவது சம்பவம் பெரும் பதற்றத்தில் பாரீஸ் நகரம்


பிரான்சில் 2 ஆவது நாளாக 2  இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். லியோன் என்ற இடத்தில் உள்ள உணவகத்தில்
வெடிகுண்டு வெடித்துள்ளது என பிரான்சில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் இல்லை என கூறப்படுகிறது. 24 மணி நேரத்தில் மூன்றாவது தாக்குதல் அங்கு நடைபெற்றுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பிரான்சில் நேற்று மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்பட்டது. பாரீஸ் நகர் அருகே உள்ள மாண்ட்ரூஜ்  நகரத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிசசூட்டில் பொலிசார் ஒருவரும் நகரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் என இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். 

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் குண்டு துளைக்காத உடை அணிந்து இருந்ததாகவும் தானியங்கி துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 

இந்த துப்பாக்கிச்சூட்டால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் அங்கு குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது.

பிரான்சில் உள்ள லியோன் என்ற நகரத்தில் உள்ள  உண வகத்தில் குண்டு வெடித்துள்ளது. 

இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன. அடுத்தடுத்த சம்பவங்களால் பிரான்சில்  பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவசர ஆலோசனை நடத்த உயர் அதிகாரிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிரான்ஸ்  தலைநகரின் மைய பகுதியில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றின் மீது நேற்று முன்தினம் காலை நடத்தப்பட்ட  தாக்குதலில், 12 பேர் பலியானார்கள். 

மேலும், 10 பேர் காயம் அடைந்தனர்.இந்த தாக்குதல், பிரான்ஸ் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது மீண்டும் இது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவதால் பிரான்சில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

மேற்படி தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று சரணடைந்த 18 வயது இளைஞர் ஒருவரை, பிரான்ஸ் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ad

ad