புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2015

னடிய அரசு, அமெரிக்க அரசு, தென்னாபிரிக்க அரசு போன்றவற்றுடனான உறுதியான உறவின் மூலமே பல விடயங்களை இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக பலவற்றை சாதிக்க முடிந்தது.னடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ராஜ் தவராஜசிங்கம்

னடிய அரசுடன் இணைந்தே ஈழத்திற்காக பலவற்றை சாதிக்க முடிந்தது: ராஜ் தவராஜசிங்கம் 
கனடிய அரசு, அமெரிக்க அரசு, தென்னாபிரிக்க அரசு போன்றவற்றுடனான உறுதியான உறவின் மூலமே பல விடயங்களை இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக பலவற்றை சாதிக்க முடிந்தது.
அத்தோடு உலகத் தமிழர் பேரவையோடு இணைந்து ஐக்கியநாடுகளவையில் தீர்மானம் வருவதற்கு நாங்கள் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டோம் என கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ராஜ் தவராஜசிங்கம் தெரிவித்தார்.
கனடாவின் பிரதமரின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட குடிவரவு அமைச்சர், லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ரூடோ, அமெரிக்க உயரிஸ்தானிகத்தின் முக்கிய அதிகாரி, இந்தியத் தூதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பொங்கல் விழாவில் வைத்தே இதனை அவர் தெரிவித்தார்.
1,200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பேசிய குடிவரவு அமைச்சர் கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தொடர்பாடல் குறித்துச் சிலாகித்ததுடன், தமிழர்களிற்கான ஒரு தரமான தலைமையாக அது வளர்ச்சி பெற்றுள்ளது குறித்தும் பெருமைபடப் பேசினார்.
அமெரிக்கத் தூதுவர், இந்தியத் தூதுவர் தங்கள் நாட்டின் சார்பாக தமிழர்களின் அமைப்புக்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஒரேயொரு நிகழ்வாக கடந்த வருடத்திலிருந்து அடையாளப்படுத்தப்பட்ட இந் நிகழ்வில் பேசிய லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ரூடோ,
இலங்கையரசு தமிழர்களிற்கு சமமாக வாழும் தீர்வை வழங்குவதை உறுதிப்படுத்துவதோடு, போர்க் குற்றம் குறித்த ஐ.நா. விசாரணைகளைத் தொடர்வதற்கு சிறீலங்கா அனுமதிப்பதையும் தங்களது கட்சி உறுதிப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
இந்திய அரசின் அங்கீகாரத்துடன் அதன் தூதுவர் மேடையேறிப் பேசியதும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வன.பிதா.இமானுவேல் அவர்களின் உரையை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்ததும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்க வைத்தது.
இனித் தமிழர்கள் வாழ்வில் துன்பியல் இல்லை. கனடியத் தமிழ்க் காங்கிரஸ் கனடிய, உலக அரசியல்வாதிகளை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும் என்ற நம்பிக்கையை நிகழ்வில் கலந்த அனைவரிடமும் ஏற்படுத்தியது.

ad

ad