புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2015


வடக்கின் வீதி இணைப்புக்கு 498 மில்லியன் ரூபாய்நிதி ஒதுக்கீடு
வட மாகாணத்திலுள்ள வீதிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ். வீதிகளை புனரமைப்புச் செய்வதற்காக 498 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
வடமாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன்  தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
 
கிளிநொச்சிஇ முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் நடைபெறுகின்றது. 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 6 பிரிவுகளின் வேலைகள் நிறைவடைந்துள்ளன. மீதி 6 பிரிவுகளின் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்தத் திட்டத்தின் கீழ் 196 கிலோமீற்றர் நீளமாக வீதி புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் நிதியிலும் அரசின் பங்களிப்பின் மூலமும் இந்தத்திட்டம் நடைபெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad