புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2015

19 20, 21 இல் விவாதம் வாக்கெடுப்பை பிற்போட எதிர்க்கட்சிகள் கோரிக்கை



பாராளுமன்றத்தில் நேற்று கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. அங்கு 19வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன், வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னர் 19 வது திருத்தத்தை 20, 21 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 19வது திருத்தத்தை திருத்தங்களுடன் கொண்டு வருவதற்கு முடியும் எனவும் அது அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்ற தீர்ப்பினை நீதிமன்றம் வழங்கியுள்ளது என்றும் அதற்கிணங்க 20 ஆம் திகதி அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவது உறுதி என சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதனை எதிர்ப்பவர்கள் ஏற்கனவே நீதிமன்றத்துக்கு மனு தாக்கல் செய்தும் சபையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இன்றும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளனர். எவ்வாறெனினும் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக தீர்ப்பினை வழங்கியுள்ள நிலையில் 19 வது திருத்தம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் சபை முதல்வர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இங்கு கருத்துத் தெரிவித்த தினேஷ் குணவர்தன எம்.பி. மேற்படி விவாதத்தை பின்போடுமாறு கேட்டுக்கொண்டார்.
வர்த்தமானியில் வெளியிடப்படாமல் உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி திருத்தம் தொடர்பில் அவர் தமது எதிர்ப்பினை இதன்போது வெளியிட்டார். எனினும் மேற்படி இரு தினங்களும் ஏற்கனவே விவாதத்திற்கென ஒதுக்கப்பட்டவை என சபை முதல்வர் தெரிவித்தார்.
இதேவேளை, 19வது திருத்தத்தை குறிப்பிட்ட தினத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு அன்றைய தினத்தில் அன்றி வாக்கெடுப்பை பின்போடுமாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டன.
20வது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 19வது திருத்தம் மீதான விவாதத்திற்கு வாக்கெடுப்பு நடத்தலாம் எனவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும், 19வது திருத்தம் மீதான வாக்கெடுப்பினை நடத்துவது தொடர்பில் முடிவெடுப்பதற்கு மீண்டும் ஒருமுறை கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இங்கு கவனம் செலுத் தப்பட்டதுடன் எதிர்வரும் தேர்தலுக்கு முன்பதாக அதனை நிறைவேற்றுவதன் அவசியம் தொடர்பிலும் ஆராயப்பட்டன. 20 வது அரசியலமைப்புத் திருத்தமாக புதிய தேர்தல் முறையை அறிமுகப் படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதற்கிணங்க அக்குழுவின் பரிந்து ரைக்கமைய விரைவில் குறித்த திருத்தம் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதேவேளை, 19வது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

ad

ad