புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2015

மீண்டும் ஒரு படகு விபத்து: 300 அகதிகளை தேடும் பணி தீவிரம்

மத்திய தரைக்கடல் பகுதியில் 300 நபர்களை ஏற்றி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச புலம்பெயர்தல் அமைப்பு(International Organisation for Migration) சற்று முன் வெளியிட்டுள்ள தகவலில், 300 நபர்களை ஏற்றி வந்த 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
மூழ்கி கொண்டிருக்கும் படகிலிருந்து உதவி வேண்டி ‘அபாய தகவல்’ அளித்த நபர், ஏற்கனவே 20 பேர் இறந்துவிட்டனர் என கூறியதாக IOM தெரிவித்துள்ளது.
அகதிகள் எந்த நாட்டிலிருந்து புறப்பட்டனர் என்றும் குறிப்பாக எந்த பகுதியில் விபத்து நடந்துள்ளது என்ற தகவல்கள் இதுவரை துல்லியமாக கிடைக்கவில்லை.
நேற்று முன் தினம், லிபியாவிலிருந்து இத்தாலி நோக்கி புறப்பட்ட படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த சுமார் 700 பேர் என்ன ஆனார்கள் என்ற நிலவரம் தற்போது வரை தெரியவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் 3 படகுகள் கவிழ்ந்துள்ளதாக கிடைத்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அகதிகள் பெருமளவில் பலியாவதை தடுக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை இன்று மாலை(20.04.15) ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad