புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2015

பிரான்ஸ் நாட்டை அவமதித்த கால்பந்து வீரர் இப்ராகிமோவிக்!

பிரான்ஸ் நாட்டையும் நடுவரையும் அவமதித்த காரணத்திற்காக ஸ்லாடன் இப்ராகிமோவிக் 4 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ் செயின்ட்- ஜெர்மைன் கால்பந்து கிளப் அணியின் வீரர் ஸ்லாடன் இப்ராகிமோவிக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 15ம் திகதி செயின்ட் ஜெர்மைன் அணி, போடோ அணியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் நடுவர் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு எதிராக செயல்பட்டதாக இப்ராகிமோவிக் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், அவர் பிரான்ஸ் நாட்டையும் அவமரியாதையாக பேசியது அங்கிருந்த கேமராவில் பதிவானது.
இது பற்றி விசாரணை நடத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு, இப்ராகிமோவிக்கு தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த தடையால் அடுத்த வாரத்தில் நடைபெற இருக்கும் நைஸ், லில்லே, மெட்ஸ் மற்றும் நன்டேஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் ஸ்லாடன் விளையாட மாட்டார். ஆனால், இந்த சீசனின் கடைசி 3 போட்டிகளுக்கு திரும்புவார்.
இப்ராகிமோவிக் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad