30 மே, 2015

5வது முறையாக பிஃபா தலைவராக செப் பிளாட்டர் தேர்வு


சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக செப் பிளாட்டர் 5வது முறையாக தேர்வானார். பிர்ன்ஸ் அலி போட்டியிலிருந்து விலகியதால் செப் பிளாட்டர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

1998, 2002, 2007, 2011 நடந்த தலைவர் பதவிக்கான தேர்தல்களிலும் பிளாட்டர் வெற்றி பெற்றார். 79 வயதாகும் செப் பிளாட்டர் சுவிட்சர்லாந்தின் விஸ்ப் என்ற கிராமத்தில் பிறந்தவர்.  39வது வயதில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்ப இயக்குநரானார் பிளாட்டர். 1881ல் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.