புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2015

ஐ.நா மனித உரிமைகள் குழுவின் விசாரணை அறிக்கை விமலிடம் சிக்கியது எப்படி?


இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா விசாரணை அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகி்நத ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட இராணுவத்தினர் 47 குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இவ்வறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இலங்கை தொடர்பாக இடம்பெறுகின்ற விசாரணையின் உத்தியோகபூர்வ அறிக்கை இதுவரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடைக்கால அறிக்கை மாத்திரமே அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகளே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஒரு நிலையில் உலகில் மிக சக்தி வாய்ந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை எவ்வாறு விமல் வீரவன்சவின் கையில் சிக்கியதென கேள்வி எழுகின்றதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.
கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற மனித உரிமைகள் அமர்வில் இவ்வறிக்கையினை வெளியிடயிருந்த போதிலும் இலங்கைக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்குவதற்காக இடை நிறுத்தப்பட்டிருந்தன.
இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமர்வில் இவ் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ad

ad