புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 ஜூன், 2015

வித்தியா படுகொலை சந்தேக நபர் தப்பி வந்தமை குறித்து பொலிஸ் உயர் அதிகாரியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்விசாரணயாழ். ஊர்காவற்றுறை - புங்குடுதீவு பகுதியில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலை சந்தேக நபர் ஒருவர் கொழும்புக்கு தப்பி வந்தது எப்படி என்பது குறித்து யாழில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் பொது மக்களால் பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட 9 ஆவது சந்தேக நபர் வெள்ளவத்தைக்கு தப்பிச் சென்றது எப்படி என்பது குறித்து முழு அளவில் விசாரணை செய்ய வேண்டும் என ஊர்காவற்றுறை நீதிவானிடம் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வீ.தவராசா கடந்த முதலாம் திகதி வழக்கு விசாரணையின் போது முன் வைத்த வாதத்துக்கு அமைய அது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதனுடன் தொடர்புடைய அனைவர் தொடர்பிலும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி எதிர்வரும் 15ம் திகதி நீதி மன்ற அமர்வின் போது அறிக்கை சமர்ப்பிக்க ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்ட நிலையிலேயே இவ்வாறு குறித்த உயர் பொலிஸ் அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய ஏற்கனவே இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாகவும் எதிர்வரும் வாரமளவில் குறித்த பொலிஸ் அதிகாரி கொழும்புக்கு அழைக்கப்படும் சாத்தியமும் உள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
எவ்வாறாயினும் உயர் பொலிஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்தியது தொட ர்பில் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவை தொடர்புகொன்டு கேட்ட போது, உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விசாரித்தது தொடர்பில் எவ்வித தகவல்களும் என்னிடம் இல்லை. எனினும் 9வது சந்தேக நபர் கொழும்புக்கு தப்பிச் சென்ற விவகாரம் குறித்து பூரண விசாரணைகள் இடம்பெறுகின்றன என்றார்.