புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2015

எதிரி சார்பில் சட்டத்தரணி ஆஜராவதை எவராலும் தடுக்க முடியாது; ஊர்காவற்றுறை நீதவான்


எதிரி சார்பில் ஆஜராகும் எந்தவொரு சட்டத்தரணியையும் தடுப்பதற்கு எவருக்கும் முடியாது . அவ்வாறு தடுத்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் அதற்கான
நடவடிக்கையினை எடுப்பேன் என ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான மரண விசாரணை நேற்று மன்றில் இடம்பெற்றது. 
இதன்போது வித்தியாவின் மரணம் தொடர்பில் 7பேர் சாட்சியமளித்தனர்.எனினும் கடந்த வழக்குத் தவணையின் போதே சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகளை நியமிக்குமாறு நீதவான் தெரிவித்திருந்தார்.
எனினும் நேற்றைய விசாரணையின் போதும் சட்டத்தரணிகள் எவரும் குற்றவாளிகள் சார்பில் சமூகமளித்திருக்கவில்லை. சட்டத்தரணிகளை ஏன் நியமிக்கவில்லை என்று நீதிபதி கேட்டபோதே எவரும் ஆஜராக மாட்டார்கள் என்று சந்தேகநபர்கள் தெரிவித்தனர்.
அதனையடுத்து பதிலளிக்கும் போதே நீதிபதி  மன்றில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 
ஒரு வழக்கைப் பொறுத்தமட்டில் சட்டத்தரணிகளின்  பங்கு மிகவும் முக்கியமானது. அந்த வழக்கை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு சட்டத்தரணிகள் அவசியமானவர்கள் . இந்தநிலையில் குறித்த வழக்கிற்கு சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை.
அத்துடன்  ஆஜராகும் சட்டத்தரணிகளை ஆஜராக வேண்டாம் என தடுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது . இருப்பினும் சட்டத்தரணிகள் தங்களுடைய சுயமான முடிவில் ஆஜராகாது விட்டாலோ அல்லது பயம் காரணமாக ஆஜராகாது போனால் அதற்கு மன்று எதுவும்  செய்ய முடியாது. 
அவ்வாறு ஆஜராக முன்வரும் சட்டத்தரணிகளை ஆஜராக விடாது யாராவது தடுத்தால் எனக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் .அதற்குரிய நடவடிக்கையினை நான் எடுப்பேன். 
அடுத்த விசாரணையின் போது சட்டத்தரணிகளை நியமிக்கவும் என்றும்  அவர் மேலும் மன்றில் தெரிவித்தார்.
இதேவேளை , நேற்று இடம்பெற்ற வழக்கின்போது தென்பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணிகள்  மூவர் மன்றிற்கு வருகைதந்திருந்தனர்.
எனினும்  வித்தியா சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி தவராசா குறித்த மூவரையும் எந்த வழக்கிற்காக வந்தீர்கள்?  வித்தியாவின் சார்பில் என்றால் உங்கள் பெயர்களை தாருங்கள் பதிவு செய்வோம் என கேட்டுள்ளார்.
தாம் வழக்கை அவதானிப்பதற்கு வந்தோம் என்று கூறியுள்ளனர். பின்னர் வழக்கு முடிவுற முன்னர் மன்றைவிட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=184404088216823754#sthash.79MvfuZB.dpuf

ad

ad