புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2015

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு, போராட்டம் நடத்தக்கூடாது காங்கிரசுக்கு சமாஜ்வாடி எச்சரிக்கை



பாராளுமன்றம் தொடங்கி முடங்கிவரும் நிலையில், போராட்டத்தை நிறுத்தவில்லை என்றால், ஆதரவு கிடையாது என்று சமாஜ்வாடி கட்சி காங்கிரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பாராளுமன்ற மழைக்கால  கூட்டத்தொடர் கடந்த மாதம் 21–ந்தேதி தொடங்கியது. இதில் லலித்மோடி விவகாரம், வியாபம் ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடரின் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த தயார் என கூறிய மத்திய அரசு, பாராளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டது.

ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், அவை நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதனால் மசோதா தாக்கல், விவாதம் போன்ற முக்கியமான அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. மேலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரை 5 நாட்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், பாராளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் பாராளுமன்ற முட்டுக்கட்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

நடப்பு கூட்டத்தொடர் முடிய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பாராளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனுமதிக்குமாறும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்கு வருமாறும் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசின் இந்த வேண்டுகோளை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டது. இன்று காங்கிரஸ் கட்சி லலித் மோடி விவகாரம் மற்றும் வியாபம் ஊழல் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டது. ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரக்கோரி காங்கிரஸ் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிகையை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்துவிட்டார். 

இதனைதொடர்ந்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைகள் 12:00 மணிவரையில் ஒத்திவிக்கப்பட்டது. பின்னரும் அதே நிலை நீடித்தது காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது. அவை தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. போராட்டத்தை நிறுத்தவில்லை என்றால், ஆதரவு கிடையாது என்று சமாஜ்வாடி கட்சி காங்கிரசுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பாராளுமன்றம் செயல்பட வேண்டும் என்று கூறிஉள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ஜனநாயகம் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று கூறிஉள்ளார். மக்களவை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது முலாயம் சிங் இதனை தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

ராஷ்டீரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாகவும் செய்தி நிறுவன தகவல்கள் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ad

ad