புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2015

வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்! அவதூறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை


வட மாகாணத்தில் தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்டு பிரேரணை ஒன்று வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
 வடமாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடமாகாண சபை கட்டடத் தொகுதியில் அவைத்தலைவர்  சீ.வி.கே. சிவஞானம் தலைமையில்  நடைபெற்றது.
இதன் போது,  வடமாகாண சபையின் உறுப்பினர் ஜயதிலக இன்று எமது பகுதிகளில் இணையத்தள ஊடகங்கள் தன்னிச்சையாக அவதூறான செய்திகளை வெளியிடுகின்றன.
இவற்றைத்  தடுக்கும் நோக்கில் வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த விடயத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் சபையில் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்து உரையாற்றினார்.
இந்நிலையில், குறித்த பிரேரணையினை ஆமோதித்து உரையாற்றிய  வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம்,
இலங்கையில் உள்ள இணையத்தளங்கள், சில கட்சிகளினாலும், இராணுவப் புலனாய்வாளர்களினாலும் இயக்கப்படுகின்றன.
இவ் இணையத்தளங்களினால் ஒரு தொகை பணம் வழங்கப்பட்டு செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன.
ஆகவே, தகவல் திணைக்களம் மற்றும் ஊடக அமைச்சில், இந்த விடயங்களை தெரியப்படுத்தி, தகவல் திணைக்களத்தின் அனுமதியின்றி நடாத்தப்படும் இணையத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை குறித்த பிரேரணைக்கு எதிராக எவருமே எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.

ad

ad