புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2015

தேசியப் பட்டியல் ஆசனங்களை பகிர்ந்து கொள்ள மைத்திரியும் மஹிந்தவும் பேச்சுவார்த்தை


தேசியப் பட்டியல் ஆசனங்களை பகிர்ந்து கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு மொத்தமாக 12 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இவற்றை சரி பாதியாக பகிர்ந்து கொள்வது குறித்து பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து நேற்றும் தேர்தல் செயலகத்தில் வைத்து இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மஹிந்த தரப்பும் மைத்திரி தரப்பும் இரு வேறு தேசியப் பட்டியல் உறுப்பினர் பரிந்துரைகளை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் எந்த பட்டியலை ஏற்றுக்கொள்வது என்பது குறித்து இன்னமும் தேர்தல் ஆணையாளர் தீர்மானம் எதனையும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு தரப்பும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் இந்தப் பிரச்சினை குறித்து நீதிமன்றின் உதவியை நாட நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

ad

ad