புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2015

ஷிகர் தவான் 150 ஓட்டங்கள் விளாசல்: 411 ஓட்டங்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய 'ஏ’ அணி


வங்கதேசம்- இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய 'ஏ' அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனால் வங்கதேச 'ஏ' அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச 'ஏ' அணி வருண் ஆரோன், ஜயந்த் யாதவ் ஆகியோரின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 228 ஓட்டங்களில் சுருண்டது.
சபீர் ரஹ்மான் (122) ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார். சுவகட்டா ஹொம் (62) அரைசதம் அடித்தார். வருண் ஆரோன், ஜயந்த் யாதவ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய 'ஏ' அணிக்கு அபினவ் முகுந்த், அணித்தலைவர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
அபினவ் முகுந்த் 34 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி காட்டிய தவான் சதம் அடித்தார்.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய 'ஏ' அணி 1 விக்கெட்டுக்கு 161 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
தவான் (116), ஸ்ரேயாஸ் ஐயர் (6) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய 'ஏ' அணியில்  ஸ்ரேயாஸ் ஐயர் (38) நிலைக்கவில்லை. தவான் 150 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கருண் நார் (71), விஜய் சங்கர் (86) அரைசதம் அடித்தனர். ஓஜா (25) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய ’ஏ’ அணி  5 விக்கெட்டுக்கு 411 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச ’ஏ’ அணி தொடக்கத்திலே 2 விக்கெட்டை பறிகொடுத்தது.
அனமுல் (0), செளமியா சர்கார்  (19) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வங்கதேச ’ஏ’ அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 36 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மொமினல் ஹக்யூ (9), லித்தன் டாஸ் (7) ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய ’ஏ’ அணி 147 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது.
PrintSendFeedback

Share/Bookmark

ad

ad