புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2015

இணைய ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரும் பிரேரணை வட மாகாண சபையில் முன்வைப்பு


ஊடக தர்மங்கள், பொறுப்புகூறல் கடப்பாடு ஆகியவற்றை பின்பற்றாத இணைய ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரும் பிரேரணை எதிர்வரும் 22ம் திகதி வடமாகாணசபையின் 35வது அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது.
குறித்த பிரேரணை வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் முன்மொழியப்படவுள்ளது. குறித்த பிரேரணையில் விடயம் தொடர்பாக இடம்பெறவுள்ள விடயங்களாக, அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் இலங்கையில் உள்ளன,
ஆனால் இணைய ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் போதுமானதாகவும், வலுவானதாகவும் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இதனால் எண்ணிலடங்காத இணைய ஊடகங்கள் நாட்டுக்கு வெளியே இருந்து இயக்கப்படுவதும், பொறுப்பு கூறல் கடமை மற்றும் ஊடக தர்மங்களை பின்பற்றாமலும் கற்பனை அடிப்படையும், தனிமனித நடத்தை மற்றும் செயற்பாடுகள் தொடர்பான அவதூறான செய்திகளையும், எமது கலாச்சாரத்திற்கு பொருந்தாத வெளியீடுகளையும், இளம் சந்ததியை கெடுக்கும் வகையில், ஆபாச படங்களையும், வீடியோக்களையும் மிக இலகுவாகவும், சுதந்திரமாகவும் வெளிட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இது சமூக அச்சுறுத்தலாகவும் அமைகின்றது.
இதனால் இலங்கையின் எல்லைப் பரப்புக்குள் செயற்படும் அனைத்து இணைய ஊடகங்களும் சட்டத்தின்படி பொறுப்புக்கூறல் கடப்பாட்டினை உறுதி செய்யும் வகையிலும், இந்த இணைய ஊடகங்கள் பதிவு இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பதையும் பதிவு செய்யப்படாத மற்றம் விதிகளை மீறும், இணைய ஊடகங்களை தொழிநுட்பரீதியாக தடை செய்யும் வகையிலான சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகங்கள் அமைச்சரை கோருவதாக இந்த பிரேரணை அமைக்கப்பட்டுள்ளது.

ad

ad