புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2015

திருச்சி அருகே பயங்கர விபத்து : அரசு பஸ் - லாரி மோதல் 10 பயணிகள் பரிதாப பலி

 திருச்சி அருகே டிரெய்லர் லாரி மீது அரசு பஸ் மோதியதில் 10 பயணிகள் பலியாகினர். 14 பேர் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து திருச்சி வழியாக நாகர்கோவிலுக்கு 46 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை டிரைவர் செபாஸ்டின் இயக்கினார். கண்டக்டராக தமிழ் செல்வன் இருந்தார். நேற்றிரவு 9 மணிக்கு திருச்சி சமயபுரம் கொணலையை தாண்டி பஸ் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் அங்குள்ள தனியார் மருத்துவக்கல்லூரி அருகே இரும்பு பிளேட்டுகளை ஏற்றி வந்த டிரெய்லர் லாரியை நிறுத்தி ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனை நடத்தி கொண்டிருந்தார். இந்த லாரியில் டிரெய்லர் அளவை விட 2 அடிக்கு இரும்பு பட்டை வெளியே நீட்டி கொண்டிருந்தது. இந்த இரும்பு பட்டை இருட்டில் தெரியாததால் பின்னால் வந்த அரசு பஸ், டிரெய்லர் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் 50 மீட்டர் தூரம் பஸ் இழுத்து செல்லப்பட்டது. இந்த கோர விபத்தில் பஸ்சின் இடதுபுறம் முழுவதையும் இரும்பு பட்டை குத்தி கிழித்தது. 

இடதுபுற சீட்டுகளில் அமர்ந்திருந்த பயணிகளின் உடல்கள் சின்னாபின்னமானது. இடிபாடுகளில் சிக்கி பயணிகள் அலறி துடித்தனர். இதில் 2 பெண்கள், 12 வயது சிறுவன் உட்பட 10 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 14 பயணிகள் படுகாயமடைந்தனர். பயணிகளின் அழு குரல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு ஓடி சென்று இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பயணிகளை மீட்டனர். இதற்கிடையில் தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு திருச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலியானவர்களின் உடல்கள், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. சம்பவ இடத்துக்கு கலெக்டர் பழனிச்சாமி, ஐஜி ராமசுப்பிரமணி, எஸ்பி ராஜேஸ்வரி, சமயபுரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டனர். அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்தவர்களின் உடல்களை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். இந்த சம்பவத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இறந்தவர்களின் விவரம்

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த கோடீஸ்வரி (35), அவரது மகன் ஆர்த்தி ராஜன் (12), கன்னியாக்குமரி களியன் விடுதி ஜீனத் ெஹட்மெட், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வினோத், சென்னை முகப்பேரை சேர்ந்த அண்ணா (25) ஆகிய 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. காயமடைந்த டிரைவர் செபாஸ்டின், கண்டக்டர் தமிழ் செல்வன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

உருக்குலைந்த உடல்கள்

dinakaran daily newspapers Foto.
பஸ்சின் இடதுபுற இருக்கைகளில் 23 பேர் பயணம் செய்துள்ளனர். மீட்பு பணியின்போது பலரது கை, கால்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனியாக கிடந்துள்ளன. உயிருக்கு போராடியவர்களை மீட்டபோது யாருடைய கை, யாருடைய உடல் என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்து கிடந்ததாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.திருச்சி: திருச்சி அருகே டிரெய்லர் லாரி மீது அரசு பஸ் மோதியதில் 10 பயணிகள் பலியாகினர். 14 பேர் படுகாயமடைந்தனர். சென்னையில் இருந்து திருச்சி வழியாக நாகர்கோவிலுக்கு 46 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை டிரைவர் செபாஸ்டின் இயக்கினார். கண்டக்டராக தமிழ் செல்வன் இருந்தார். நேற்றிரவு 9 மணிக்கு திருச்சி சமயபுரம் கொணலையை...


ad

ad