புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2015

சம்பள பேச்சுவார்த்தை தோல்வி : தொண்டமான் கலந்துகொள்ளவில்லை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு
ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்களுக்கும் இடையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையும் எவ்வித இணக்கப்பாடுமின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
ஆறு மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வில்லை. 1000 ரூபாவுக்கான போரட்டம் தொடர்கின்ற நிலையில் முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் காணமுடியாததிருப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட 1000 ரூபா சம்பள அதிகரிப்புக் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் நிராகரித்த அதேவேளை, சம்பள அதிகரிப்பு தொடர்பில் எவ்வித சாதக சமிக்ஞைகளையும் காட்டவில்லை. அத்துடன் வரவுக் கொடுப்பனவை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் கடந்த பேச்சுவார்தையின் போது ஒப்புக்கொண்ட போதிலும் அடிப்படை சம்பளம் அல்லாது மேற்படி வரவுக் கொடுப்பனவை தொழிற்சங்க பிரதிநிதிகள் நிராகரித்தனர்.
இப்பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் கங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், கட்சியின் தலைவர் முத்து சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொள்ள வில்லை.

ad

ad