புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2015

பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சி அமைக்கப்பட்ட பதுங்குகுழி / முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது சொகுசு மாளிகையல்ல, அது பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சி அமைக்கப்பட்ட பதுங்குகுழி
என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நரெஹன்பிட்டி அபேயராம விகாரையில் நேற்று பௌத்த மதத் தலைவர்களை சந்தித்து ஜெனிவா தீர்மானம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடினார்.அதன் பின்னர் தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்துகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மாளிகையில் இரகசிய மாளிகை ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இது மாளிகை அல்ல. நாம் அமைத்தது பதுங்குகுழியேயாகும். அவ்வாறு பதுங்குகுழி ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிப்பதை நான் மறுக்கவில்லை. இது யுத்த காலகட்டத்தில் அமைக்கப்பட்ட பதுங்குகுழியாகும். குறிப்பாக விடுதலைப் புலிகளின் தரப்பு பலமடைந்து இருந்த காலகட்டத்தில் எம்மை பாதுகாக்கவேண்டிய தேவை இருந்தது. அந்த நேரத்தில் முக்கிய பாதுகாப்பு கலந்துரையாடல்களையும் முக்கிய தீர்மானங்களையும் நாம் ஜனாதிபதி மாளிகையில் தான் மேற்கொள்வோம்.
அவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி மாளிகை தாக்கப்பட்டால் இந்த பதுங்குழியில் இருந்து செயற்படலாம் என்ற நோக்கத்துக்காகவே இதை உருவாக்கினோம்.உண்மையில் இந்த பதுங்குகுழியை வெளியில் இருந்து பார்க்கும் போது சாதாரண வீடு போன்று தெரியும். ஆனால் உள்ளே பாதுகாப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. யுத்த காலகட்டத்தில் இதை நாம் அமைத்தோம். ஏனெனில் அப்போதைய சூழ்நிலையில் புலிகளின் தாக்குதல் மிகவும் கடினமாக இருந்தது. விமான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டனர். அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எமக்கு இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி இருந்தது.
அவர்களின் விமான தாக்குதல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் என்பன எமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. ஆகவே அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருந்தோம். ஜனாதிபதி மாளிகையில் மட்டுமல்ல அலரிமாளிகையிலும் இவ்வாறான பதுங்குகுழி உள்ளது. இன்னும் சில முக்கிய இடங்களிலும் பதுங்குகுழிகள் உள்ளன. அவற்றை அமைத்தது தவறென குறிப்பிட முடியாது. நாம் தாக்குதல் நடத்தும்போது புலிகள் பதுங்குகுழி அமைத்தனர். அதேபோல் அவர்கள் தாக்கும் போது நாம் பதுங்குகுழி அமைத்தோம்.
பிரபாகரனும் இவ்வாறு பதுங்குகுழிகளை அமைத்து வைத்திருந்தார். அவரது வீட்டின் அடியிலும் இரகசிய பதுங்குகுழி இருந்ததே. அதை எவரும் விமர்சிக்கவில்லை. அதேபோல நாமும் எமது பாதுகாப்பிற்காக பதுங்குகுழியை அமைத்துக்கொண்டோம். புலிகள் செய்வது நியாயமெனின் நாம் செய்வதும் நியாயமானதே.

ad

ad