புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2015

நாகதீபவின் பெயரை மாற்றுவதை நானும் எதிர்க்கிறேன்! சம்பந்தன் வலியுறுத்தல்


நாகதீப என்ற பெயரை நயினாதீவு என்று மாற்றம் செய்வதை தானும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
ஞாயிறு திவயின வார இதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெயர்மாற்றம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஆர். சம்பந்தன்,
நாகதீபவின் பெயரை நயினாதீவு என்று மாற்றுவதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்.
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான செயற்திட்டங்கள் குறித்தே நாம் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து ஒரே நாட்டுக்குள் நாம் பிரிந்து வாழ முடியாது.
நாகதீப விகாரைக்கு நானும் சென்றுள்ளேன். அங்குள்ள பிக்கு கட்டிய பிரித் நூல் இன்னும் என் கையில் உள்ளது.
நாகதீப விகாரை போல நயினாதீவு கோயிலும் அங்கு இருக்க வேண்டும். நாங்கள் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து நடக்க முயற்சிக்கும் போது ஒரு சிலர் பிரித்தாள முயற்சிக்கின்றார்கள். அதற்கு இடமளிக்க முடியாது.
எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அரசாங்கத்தின் தவறுகளை உரியநேரத்தில், உரிய முறையில் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ad

ad