புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2015

பாரிஸ் தாக்குதல்:முக்கிய சந்தேக நபர் அடையாளம்?

பாரிஸ் தாக்குதல்கள் தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணைகள், மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த பெல்ஜிய
நாட்டு பிரஜை ஒருவரை மையப்படுத்தி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
அப்தல் ஹமீத் அபாவுத் எனும் 27 வயதான இந்த நபர், பிரசல்ஸ் நகரில் இரண்டு தாக்குதாளிகள் தங்கியிருந்த அதே பகுதியில் தங்கியிருந்தார் எனவும் கூறப்படுகிறது.
சந்தேகத்துகுரிய இந்த நபர் தற்போது சிரியாவில் ஐ எஸ் அமைப்பில் உள்ளார் என பாதுகாப்பு அதிகாரிகள் நம்புகிறார்கள். இதனிடையே மேலும் இரண்டு தாக்குதலாளிகளை பிரெச் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
பேட்டக்லா(ன்) இசை அரங்கில் தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகளில் சமி அமிமூரும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு, தீவிரவாத சதித்திட்டம் ஒன்று தொடர்பாக முறையாக விசாரணைகளுக்கு அந்த நபர் உட்படுத்தப்பட்டிருந்தார்.
பிரான்ஸின் தேசிய விளையாட்டு அரங்கில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய நபர் அஹ்மட் அல் மொஹ்மட் என்று நம்பப்படுகிறது. அவரது உடலுக்கு அருகில் கிடைத்த கடவுச் சீட்டு, அவருடையது என உறுதியானால் அவர் சிரியாவில் 1990ஆம் பிறந்தவர் என்பது தெரியவரும்

ad

ad