-

25 ஜன., 2016

காணாமல் போனவர்களை வெளிப்படுத்துங்கள்; யாழில் ஆர்ப்பாட்டம்!

சம உரிமை மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் 3 கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் காலை 10.30 மணி தொடக்கம் 11.30 வரையிலான ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், காணாமல்போனவர்களை வெளிப்படுத்துங்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுங்கள் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காணாமல்போனவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டனர். 

இதன்போது காணாமல்போனவர்கள் உயிரிழந்ததாக பிரதமர் ரணில் கூறிய கருத்துக்கு காணாமல்போனவர்களின் உறவுகள் கடும் எதிர்ப்பு தெரிவpத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                                       

                                                       

                                                                              

ad

ad