புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2016

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்: ஜெ. அதிரடி- பின்னணி என்ன?

 முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், வேளச்சேரி பகுதி செயலர் எம்.கே.அசோக் எம்எல்ஏ உள்பட ஐந்து பேரை க
ட்சி பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் நிதியமைச்சர் ஓபிஎஸ்-ஸின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதிமுகவில் உட்கட்சி விவகாரங்களை களை எடுக்க கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார். நிதியமைச்சராக உள்ள ஓபிஎஸ் மீது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக ஜெயலலிதாவின் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
 
ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், அவர் வகித்து வந்த அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே போன்று தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எல்லப்பட்டி முருகன், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர செயலர் கே.மாரியப்பன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பழனி நகர கழக செயலராக வி.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போன்று தென் சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி பகுதி செயலர் பொறுப்பில் இருந்து வந்த எம்.கே.அசோக் எம்எல்ஏ அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த இடத்திற்கு 177வது அதிமுக செயலளாரும், கவுன்சிலருமான எம்.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதே போன்று நீக்கப்பட்ட இன்னொரு முக்கியமான நபர் மீனவர் பிரிவு துணைச் செயலராக இருக்கும் டி.ரமேஷ் ஆவார். இவர் மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ராஜலட்சுமிக்கும், ஓபிஎஸ்-க்கு நெருங்கிய ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருமே ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் ஆவர். ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை,  தலைமை செயலக வட்டாரத்தில் இருக்கும் ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி காரணம்


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுகவில் விருப்ப மனுக்கள் அண்மையில் வழங்கப்பட்டது. ஜெயலலிதாவை பொறுத்தவரையில் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை அறிவிப்பது கிடையாது. தானாகவே முடிவெடித்து வேட்பாளர்களை அறிவித்துவிடுவார். மேலும், தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களின் கருத்துகளையும் ஜெயலலிதா கேட்பாரா என்பதும் கிடையாது.
இந்த நிலையில் தேனியில் உள்ள அமைச்சர் ஓபிஎஸ் வீட்டில் கடந்த ஒரு வாரமாக கூட்டம் அலைமோதி வருகிறது. இதனை அறிந்த ஜெயலலிதா, உளவுத்துறை மூலம் தகவல் அறிய உத்தரவிட்டுள்ளார். அவர்கள், தேர்தல் சீட்டுக்காக வருவதாக உளவுப்பிரிவு, ஜெயலலிதாவிடம் தகவல் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்தே ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். 

இதனிடையே, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதற்கான இன்னொரு காரணமும் கிடைத்துள்ளது.

முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் நீக்கப்பட்டதற்கு, சசிகலாவின் கணவர் நடராஜனை சந்தித்து பேசியதே காரணம் என்று கூறப்படுகிறது. 

எம்.கே.அசோக் எம்எல்ஏ, டி.ரமேஷ் ஆகியோர் கட்சிக்காரர்களை மட்டுமின்றி, மாவட்டச் செயலாளர்களையும் மதிப்பதே கிடையாதாம். இதனாலே இவர்கள் இரண்டு பேரும் நீக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எல்லப்பட்டி முருகன், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர செயலர் கே.மாரியப்பன் ஆகியோர் அம்மா நூறாண்டு காலம் வாழக வேண்டும் என்ற வேண்டுதலுடன் தைபூசத்தையொட்டி பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். அப்போது, 'போர்படைத் தளபதி சசிகலா' என்று பெரிய பேனர் வைத்துள்ளனர். இதனாலேயே இவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ad

ad