புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 பிப்., 2016

ஹரிஸ்ணவியின் கொலையில் திடீர் திருப்பம்! தாயார் மீது சந்தேகப் பார்வை


பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி ஹரிஸ்ணவியின் கொலையானது அனைவரையும் ஒருகணம் நிலை குலையச் செய்துள்ளது.
வித்தியா,சேயா,விஜயகுமாரி தற்போது ஹரிஸ்ணவி என பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவி சிறுவர்களின் பெயர் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.
இதற்காக பொதுமக்களாலும், பல அமைப்புக்களாலும் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் செய்தாலும் அவை அனைத்தும் பயனற்றதாகவே போய்விடுகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை.
இந்த வகையில் வவுனியாவில் அண்மையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்த சிறுமி ஹரிஸ்ணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், கொலையாளியை கைது செய்யக்கோரி நேற்று வட மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் வடமாகாணமே செயலிழந்து காணப்பட்டது.
இந்த நிலையில் குறித்த சிறுமியின் மரணபரிசோதனையின் போது இவரது உடலில் நகக்கீறல்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் குறித்த சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் யாரும் கைதுசெய்யப்படாத நிலையில், இந்தக் கொலைக்கு குறித்த சிறுமியின் தாயாருக்கு தொடர்பு இருப்பதாக வவுனியா நகர பிரேதபரிசோதனை அதிகாரியால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமையை சுட்டிக்காட்டியே நேற்றைய தினம் வவுனியா நகரில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.