புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2016

தேசியக் கொடி ஏற்றினார் விக்கிவடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,

இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆண் மாணவர் விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கடந்த காலப் போர் நடை பெற்றவேளை பெற்றோரை இழந்த பொருளாதார ரீதியில் பாதிப்புற்ற வடக்கு - கிழக்கு - மலையக, தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக்

கருத்தில் கொண்டு சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் சர்வதேச பழைய மாணவர் ஒன்றியத்தினால் 80 மில்லியன் ரூபா செலவில் ஆண்கள் விடுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன் ஆரம்பத்தில் இலங்கையின் தேசியக் கொடியை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து பாடசாலைக் கொடியை, பாடசாலை அதிபரும், வலயக் கொடியை வலயக் கல்விப் பணிப்பாளரும் ஏற்றி வைத்தனர்.

இந்த நிகழ்வு, கல்லூரி அதிபர் ந.ஜெயகுமாரன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார், கல்லூரியின் முன்னாள் அதிபர்களான க.அருந்தவபாலன், மு.நாகேந்திரராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ad

ad