-

4 மார்., 2016

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய காங்கிரஸ் எதிர்ப்பு.. பெங்களூரில் ஜெயலலிதா உருவ படம் எரிப்பு

முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து பெங்களூரில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசு, மத்திய அரசிற்கு கடிதம் எழுதியது.
தமிழக அரசின் இந்த முடிவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக பெங்களூரில் இன்று மதியம், இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெஜஸ்டிக் அடுத்த ஆனந்தராவ் சர்க்கிள் பகுதியில் இந்த போராட்டத்தின்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஜெயலலிதா போட்டோவுடன் கூடிய கண்டன பேனர்களை அவர்கள் தூக்கி வைத்திருந்தனர்.
இறுதியில், ஜெயலலிதாவின் உருவபடத்தையும் எரித்தனர்.04-1457080848-congress-protest-against-jayalalitha

ad

ad