புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2016

மைத்திரி, ரணில் முன்னிலையில் அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்

13வது திருத்தசட்டத்தினை அமுல்படுத்த கடந்த அரசாங்கங்கள் முயற்சிக்காமையே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு இதுவரை எட்டப்படாமைக்கு காரணம் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைபின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்தார்.
பாலமுனையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 19 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்து சமூகங்களும் அதிகாரப்பகிர்வில் நன்மையைடைய வேண்டும் என்பதற்காகவே  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக அதிகார பகிர்வினை வலியுறுத்தி  வருகின்றது.
அதிகார பகிர்வினை மேற்கொள்ளவதில் அரசாங்கம் பாரிய பிரச்சினைகளை  எதிர்நோக்கி வருகின்றது.
எனினும் இலகுவாக தீர்க்க கூடிய விடயங்களை காலம் தாழ்த்தி மேற்கொள்வதால் மக்கள் பெரும் சௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
அதிகார பகிர்வு எனும் விடயமானது 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்துடன் தொடர்புடையது.  எனினும் அதனை அமுல்படுத்த கடந்த அரசாங்கங்கள் முயற்சிக்கவில்லையென இரா. சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ad

ad