புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2016

சற்று முன் யாழ்ப்பாணத்தைப் புயல் தாக்கத் தொடங்கியது!

இன்று மாலையில் இருந்து வடபகுதியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் கடும் மழை பெய்து கொண்டிருப்பதாகவும் சற்று முன் அங்கு
கடும் காற்று வீசி வருவதாகவும் தெரியவருகின்றது. தென்மராட்சியின் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை பெய்து கொண்டிருக்கும் மழை காரணமாக தென்மராட்சி யாழ் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருப்பக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை, திருமலைக்கு அண்மையாக மையங்கொண்டிருந்த தாழமுக்கம் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால் கடும் மழையுடன் கூடிய காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 70 கிலோ மீற்றர் முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் இரு நாள்களும் மீனவர்களைக் கடலுக்குச் செல்லவேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளது.

ad

ad