5 ஜூன், 2016

சுதந்திரக்கட்சியின் 2 ஆவது தலைவராக கோத்தபாய : உதய கம்மன்பில மறுப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சுதந்திரக்கட்சி தலைவர்களுடன் ஒன்றிணையவில்லையென கூட்டு
எதிர்கட்சியின் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான செயலாளரான உதய கம்மன்பில தெரிவிக்கையில், தனக்கு தெரிந்த வரையில் 2 ஆவது தலைவர் நியமிப்பது தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை சுதந்திரக்கட்சியின் 2 ஆவது தலைவராக நியமிக்க வேண்டுமென தொழிலாளர்கள் மற்றும் தொழிற்கட்சி சங்கங்கள் அமைச்சர் டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன   நேற்று கொலன்ன பகுதிக்கருகில் இடம்பெற்ற சுதந்திரக்கட்சி கூட்டத்தின் போது தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பில் எந்த வித அறிக்கைகளும் இதுவரை எனக்கு கிடைக்கப்பெறவில்லையென கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.