புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2016

சென்னை தாம்பரம் விமானப்படைத்தளத்திலிருந்து 29 பேருடன் அந்தமானுக்குப் பறந்த விமானம் மாயம்!

சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானப் படைக்கு சொந்தமான விமானம் திடீரென காணாமல்
போனது. அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்னவென தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. நடுவானில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8.46 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்தும் முயற்சித்தும் விமானத்தில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. நடுவானில் திடீரென 29 பேருடன் விமானம் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் பயணித்த 29 பேரின் கதி என்ன என்று தெரியாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விமானம் வங்கக் கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் சென்னைக்கும் அந்தமானுக்கும் இடையிலான கடற்பரப்பில் மாயமான விமானம் தேடப்பட்டு வருகிறது. 2 டார்னியர் ரக விமானங்கள், 4 கடற்படை விமானங்கள் மாயமான விமானத்தைத் தேடி வருகின்றன.

ad

ad