புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2016

மஹிந்த அணியை இணைக்கும் முயற்சி தோல்வி! - சுதந்திரக் கட்சியை பலப்படுத்த புதிய திட்டம்

மஹிந்த ஆதரவு அணியை ஒன்றிணைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில் கட்சியை பலப்படுத்துவதற்கான புதிய திட்டமொன்றை ஒரு வார
காலத்தினுள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐ. ம. சு. மு.வும் திட்டமிட்டுள்ளன. இந்த புதிய திட்டத்தை உடனடியாக செயற்படுத்த இருப்பதாக ஐ. ம. சு. மு. செயலாளர் அமைச்சர் மஹிந்த சமரவீர தெரிவித்தார்.எதிர்வரும் வாரங்களில் மஹிந்த ஆதரவு அணியில் உள்ள சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் பலர் நீக்கப்பட்டு சு. க. வுக்கு விசுவாசமான புதியவர்கள் கட்சி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின. ஐ.ம. சு. மு. புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட மஹிந்த அமரவீர, பிரிந்து சென்றுள்ள மஹிந்த ஆதரவு அணியை இணைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார். இது தொடர்பில் பல சுற்று பேச்சுக்களும் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷவை கட்சியின் இரண்டாம் தலைவராக நியமிக்கவும் முயற்சிக்கப்பட்டது.
கட்சியை ஒன்றிணைக்க தான் முன்னெடுத்த முயற்சிகள்தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக் கொண்டுள்ள ஐ. ம. சு. மு. செயலாளர் அமரவீர அடுத்த கட்ட நகர்வாக புதிய யோசனை திட்டமொன்றை தயாரி்த்து வருவதாக அறிவித்தார். ஜனாதிபதிக்கு இதனை கையளித்து துரிதமாக அமில்படுத்த இருப்பதாக கூறிய அவர், அதில் முதற் திட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றார்.
கட்சி மேம்பாட்டுக்காக செயற்படாத அமைப்பாளர்களை நீக்கி புதியவர்களுக்கு இடமளிக்க பின்நிற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட சுமார் 9 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதோடு இம் மாதம் முதல் நேர்முகப் பரீ்ட்சைகள் ஆரம்பிக்கப்பட்டு இரு வாரங்களில் அவை பூர்த்திசெய்யப்பட உள்ளன. இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தனிக் கூட்டணியாக போட்டியிட இருப்பதாக மஹிந்த ஆதரவு அணி எம். பி. ரஞ்சித் த சொய்சா தெரிவித்துள்ளார்.

ad

ad