புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2016

சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு அழுத்த

அனைத்துலக சமூகத்துக்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்  சார்பில்,  தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதிச் செயலர் மான்பிரீத் சிங் மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரி ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பில், ஜெனிவாவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தனர்.

அத்துடன், காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் பொறிமுறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,

“அமெரிக்காவின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கை அரசாங்கத்தினால்  உறுதிமொழி அளிக்கப்பட்ட பல விடயங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதை, அமெரிக்க அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியிருந்தோம். இதனை தம்மால் கூட காணக்கூடியதாக உள்ளது என்று நிஷா பிஷ்வால் குறிப்பிட்டார்.

வடக்கில் இன்னமும் அதிகரித்துக் காணப்படும் இராணுவ பிரசன்னம், காணி விடுவிப்பில் காணப்படும் மந்தமான செயற்பாடுகள் மற்றும் முல்லைத்தீவில் புதிதாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக,  நிஷா பிஸ்வால் தலைமையிலான அமெரிக்க குழுவினரிடம் எடுத்துக்கூறினோம்.

இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என்றும், நல்லிணக்க விடயத்தை கைவிடப்போவதில்லை என்றும் நிஷா பிஷ்வால் எம்மிடம் உறுதியளித்தார்” என்று குறிப்பிட்டார்.

ad

ad