புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2016

ஆந்திராவில் கைதான 32 தமிழர்கள் சிறையில் அடைப்பு: ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 பேர் மீதும் ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.செம்மரம் வெட்ட சென்றதாக 32 தமிழர்களை ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் கைது செய்ததாக ஆந்திர போலீஸ் தகவல் வெளியிட்டது.
தமிழர்கள் 32 பேரும் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் ஆந்திர போலீசாரின் முன்னுக்கு பின் முரணான தகவல் சர்ச்சையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டி.எஸ்.பி. நஞ்சுண்டப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
வியாழக்கிழமையன்று கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆந்திர அதிரடி படை போலீசார் ரேணிகுண்டா மண்டலம் வெங்கடாபுரம் இடுகாடு அருகில் மாலை 4 மணிக்கு செம்மரக் கடத்தல்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் 32 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. 32 பேரையும் திருவண்ணாமலையை சேர்ந்த குமார், தேவராஜ், தியாகராஜன் ஆகிய 3 ஏஜன்டுகள் அழைத்து வந்தனர். அவர்கள் தப்பி விட்டனர்.
பிடிபட்டவர்களை சோதனையிட்டதில், மரம் வெட்ட பயன்படுத்தும் கருவிகள், சமையல் செய்ய தேவையான பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
கைதானவர்களில் 29 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் வேலூரையும், மீதமுள்ள ஒருவர் சென்னையையும் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

ad

ad