புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2016

நல்லூரானிற்கு இன்று இரதோற்சவம்

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. ஆலங்காரக் கந்தன் தேரில் பவனிவர
இலட்சோப இலட்சம் பக்தர்கள் புடைசூழ வடமிழுத்தனர். இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய தேர்த் திருவிழாவில் பக்தர் வெள்ளம் எழுப்பிய “அரோகார” சத்தம் வானைப் பிளந்தது.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நல்லூர் கந்தனை தரிசிக்க மக்கள் பெருந்திரளானோர் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை விமானப் படையினர் நல்லூர் கந்தனுக்கு மலர் சொரிந்து வானை வட்டமிட்ட காட்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
கடந்த மாதம் 11 ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவத்தில் நேற்று இருபத்தி மூன்றாவது நாள் சப்பரத் திருவிழா இடம்பெற்றதுடன், இன்று தேர்த் திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. நாளை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.

ad

ad