புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2016

இலங்கையில் தமிழருக்கெதிரான அநீதிகள் தொடர்கின்றன-ஐ.நா

இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவ தாகவும், மக்கள் தொடர்ந்தும் அச்சமான சூழலில் வாழ்ந்து வருவதாகவும் இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழு தெரி வித்துள்ளது.

ஐ.நா. சபையில் நடைபெற்று முடிந்த இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விட யம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அநீதியை எதிர்நோக்கி வருகின்றனர். இலங்கையில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் வல்லுறவுகள் தொடர்பான எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை.

அதுமட்டுமின்றி அரச துறைகளில் தமிழ் மொழி குறைபாட்டினால் தமிழ் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். மேலும், அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தினால் மக்கள் தொடர்ந்தும் அச்சம் மிகுந்த சூழலிலேயே தமது வாழ்நாளை கழித்து வருகின்றனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பல்வேறு தமிழர் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமலேயே உள்ளது.அத்துடன் வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் 

வெறுப்புணர்வு மற்றும் இனவெறி மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்ட கருத்துக்கள், இனவெறுப்பை தூண்டுதல், இன மற்றும் நிற அடிப்படையில் மற்றுமொரு நபரை அல்லது குழுவினருக்கு எதிரான வன்முறை, அவ்வாறான வன்முறைகளை தூண்டுதல் போன்றவற்றுக்கு தடைவிதிப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ad

ad