புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2016

பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துராய்க்கு ராஜிவ் கேல் ரத்னா விருது


பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துராய்க்கு ராஜிவ் கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வென்று தந்து வரலாறு படைத்தார்.  இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் 58 கிலோ எடைப்பிரிவில் களம் இறங்கி வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க ஏக்கத்தை தணித்து, ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். இதேபோன்று பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.  

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்கில் கலந்து கொள்ள இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தகுதிப்பெற்று வரலாறு படைத்தார். 

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதிப்பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் தனதாக்கிய தீபா கர்மாகர் இறுதிப்போட்டியில் மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார், 4 வது இடம்பிடித்தார். தீபா கர்மாகர் பதக்கம் வெல்லா விட்டாலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்தியர்களின் உள்ளங்களை கவர்ந்தார். சிறிய தொழில் நுட்ப தவறுகளால் அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போனது. ஆனால் தனது அறிமுக ஒலிம்பிக்கிலேயே அமர்க்களப்படுத்தினார். ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி உள்பட அனைத்து தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர். 

ராஜிவ் கேல் ரத்னா விருது

இப்போது பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்துராய்க்கு (துப்பாக்கி சுடுதல்) ராஜிவ் கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததால் மத்திய அரசு கவுரவப்படுத்தி உள்ளது. 

துரோணாச்சாரியார் விருது

நீச்சல் போட்டி பயிற்சியாளர் பிரதீப் குமார், ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தி, கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா,  தடகள பயிற்சியாளர் நாகபூரி ரமேஷ் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளர் சாகர் மால் தயாலுக்கு துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அர்ஜுனா விருது

15 வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஹானே (கிரிக்கெட்), ராஜத் செளகான் (வில்வித்தை), லலிதா பாபர் (தடகளம்), செளரவ் கோத்தாரி (பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர்), ஷிவ தாபா (குத்துச்சண்டை), சுப்ரதா பால் (கால்பந்து), ராணி (ஆக்கி), வி.ஆர். ரகுநாத் (ஆக்கி), குர்ப்ரீத் சிங் (துப்பாக்கி சுடுதல்), அபூர்வி சந்தியலா (துப்பாக்கி சுடுதல்), சவுமியாஜித் கோஷ் (டேபிள் டென்னிஸ்), வினேஷ் (மல்யுத்தம்), அமித் குமார் (மல்யுத்தம்), சந்தீப் சிங் மன் (பாரா-தடகளம்), விரேந்தர் சிங் (மல்யுத்தம்) ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கி வீரர் சில்வானாஸ், தடகள வீராங்கனை சாத்தி கீதாவிற்கு தயான்சந்த் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஆகஸ்ட் 29-ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்குகிறார். 
ராஜிவ் கேல் ரத்னா விருது பெறுவோருக்கு ரூ.7.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். துரோணாச்சாரியார், அர்ஜுனா விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்.

ad

ad