புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2016

அதிமுகவில் இணையும் மகன்? கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு ஸ்டாலின் அட்வைஸ்

 முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மகன்
அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் அதிமுகவுக்கு போனால் போகாட்டும் கவலைப்பட வேண்டாம் என சொல்லி ஆறுதல் சொல்லி இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு நாராயணன், ரமேஷ் என்ற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்., மகன்கள் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்தார்.
மூத்த மகன் நாராயணன் பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார்., இளைய மகன் ரமேஷ் ஆரம்பத்தில் அரசியலில் ஆர்வம் செலுத்தியவர், பின்னர் அதில் இருந்து ஒதுங்கி, ஸ்பின்னிங் மில், ஜவுளி கடைகளை நடத்த துவங்கினார். தொடர்ந்து பஞ்சு வியாபாரத்திலும் கவனம் செலுத்தினார். ஆனால் பஞ்சு வியாபாரத்தில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதில் ரமேஷ் கடனில் சிக்கிக்கொண்டார். இதில் கடன் தொகையை கேட்டு பஞ்சு விற்பனை செய்தவர்கள் நெருக்கடி கொடுக்கத்துவங்கினர்.
இது தொடர்பாக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடமும் முறையிட்டவர்கள், ரமேஷ் மீது புகார் பட்டியலை வாசிக்கத்துவங்கினர். இது அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரமேஷை கே.கே.எஸ்.எஸ்.ஆர் கேட்க.. குடும்பத்தில் சிக்கல் ஏற்பட்டது. தந்தை, மகனுக்கு இடையே பேச்சுவார்த்தை நின்று போனது. கடந்த சட்டசபை தேர்தலின் போது இந்த விவகாரம் எதிரொலித்தது. தேர்தல் வேலைகள் எதிலும் ரமேஷ் ஈடுபடவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை.  
இந்நிலையில் அப்பா, மகனுக்கிடையே உள்ள இந்த பிரச்னையை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்ட அருப்புக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வைகைச்செல்வன், ரமேஷை அதிமுகவுக்கு வர அழைப்பு விடுத்ததோடு, கட்சியில் சேர்ப்பதாக உறுதியும் அளித்தார். ஜெயலலிதா முன்னிலையில் ரமேஷ் அதிமுகவில் சேர விருப்ப கடிதமும் பெறப்பட்டது.
ஆனால் அதிமுக தலைமையிடம் இருந்து இன்னும் க்ரீன் சிக்னல் கிடைக்காததால் காத்திருக்கிறார் ரமேஷ்.
இந்நிலையில் இந்த விவகாரம் அறிந்த மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை தொடர்பு கொண்டு அவரது குடும்ப குழப்பங்கள் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார். எல்லாவற்றையும் கேட்டறிந்த அவர் இறுதியாக 'உங்கள் மகன் ரமேஷ் அதிமுகவுக்கு போனால் போகட்டும். சமாதானம் செய்கிறேன் என்று பேச்சுவார்த்தை நடத்தி அவரை பெரிய ஆளாக்க வேண்டாம். கவலைப்படாம இருங்க' என ஆறுதல் சொன்னாராம்.
இதனால் மகன் ரமேஷ் அதிமுகவில் சேரும் விவகாரத்தில் கவலையில் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். இப்போது கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.

ad

ad