புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2016

போட்டிபோடும் பேருந்துகளால் அச்சத்தில் தீவக பயணிகள்


ஊர்காவற்துறை தனியார் பேருந்து மற்றும் குறிகாட்டுவான்   தனியார் பேருந்துகள்  போட்டி போட்டு வேகமாக ஓடுவதால் பேருந்து களில் பயணிப்பது அச்சமாக உள்ளதாக பயணிகள்  தெரிவிக்கின்றனர்.. 

இது பற்றி  அவர்கள்    மேலும் தெரிவிக்கையில் 

யாழ்ப்பாணம்- குறிகாட்டுவான் தனியார் பேருந்து சேவை மற்றும் யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் பயணிகளை ஏற்றுவதற்காக  ஏற்படும் பேட்டி காரணமாக ஊர்காவற்துறை வீதியினூடாக  வேகமாக செல்வதனால் பேருந்தில் பயணிப்பது அச்சம் அடைய வைக்கிறது.

வேகமாக செல்வதால் பயணிகளை குறித்த இடத்தில் இறக்கி விடுவதில்லை எனவும்  வேகமாக இறங்குமாறு கூறுவதாகவும்         இதனால்  வயோதிபர்கள் கர்ப்பிணித்தாய்மார்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் பாதையின் இருபக்கங்களிலும் கடல் இருப்பதால் இவர்களின் போட்டி காரணமாக விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் பேருந்துகள் கடலில் விழும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஒரு  சிறு ஆதாயங்களிற்காக கண்முடித்தனமாக பேருத்துகளை செலுத்தி விபத்துக்களால் விலை மதிப்பற்ற உயிர்கள் காவு கொள்ளப்படுதல் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நடந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

ad

ad