புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2016

யுத்த பாதிப்பிற்குள்ளான மக்கள் மூன்று மாத காலத்தில் மீள்குடியமர்வு-ஜனாதிபதி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ-மூனுடனான நேற்றை சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடக பிராதானிகளுடனான சந்தி ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.   

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்ப தற்காகவே பான் கீ-மூன் இலங்கைக்கு வந்துள்ளதாக சில தரப்பினர் குறிப்பிட்டு ள்ளனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது அவ்வாறான எவ்வித அழுத்த ங்களும் பிரயோகிக்கப்படவில்லை.

அத்துடன்இ வடக்கில் உள்ள சிலர் அரசியல் நோக்கங்களுக்காக மீள்குடியேற்ற விவகாரத்தில் மக்களை குழப்பி திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

ஆனால் இவ்வாறானவர்களின் முயற்சிகளை தோல்வியடையச் செய்யும் வகை யில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முழுமையாக மீள்குடியேற்ற நடவடி க்கைகள் நிறைவுசெய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

அத்துடன் இலங்கையில் பூரண அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச் செய லாளர் பான் கீ மூனிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீண்டகால போராட்டத்தில் இருந்து தற்போது தான் வெளியில் வந்துள்ளோம்.
அதிலிருந்து முழுமையாக விடுபட சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என ஐ.நா செயலாளரிடம் கோரியதாக ஜனாதிபதி கூறியுள்ளார்

ad

ad