புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2016

துணை முதல்வரோ, பொறுப்பு முதல்வரோ நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளதா? வைகோ பதில்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. 

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 

அவர் ராஜாங்க அமைச்சராக இருந்தபோது மிக நெருக்கமாக பழகினேன். அவரது வீட்டிற்கு விருந்துக்காக வாஜ்பாளை அழைத்திருந்தார். அப்போது 6 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் நானும் ஒருவன். இதிலிருந்து எங்கள் நட்பை புரிந்து கொள்ளலாம். அவர் இங்கு பொறுப்பு ஆளுநராக வந்தவுடன் என்னை தொடர்பு கொண்டார். அப்போது நான் கிராமத்தில் இருந்தேன். நான் உங்களை சந்திக்க விரும்புறேன் என்று கூறினார். இத்தனை வருடங்கள் கழித்து ஞாபகத்துடன் என்னை அழைக்கிறிர்கள். நான் சென்னையில் இல்லை. கிராமத்தில் இருக்கிறேன். சென்னை வந்தவுடன் சந்திக்கிறேன் என்றேன். கடந்த 10, 12 நாட்களாக நான் சென்னையில் இல்லை. இன்று காலைதான் வந்தேன். காலையில் முதல் அமைச்சரை காண அப்பல்லோ சென்றேன். பின்னர் ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்னை சந்திக்க விரும்பியதால் இன்று சந்தித்தேன். நட்பு ரீதியாக சந்தித்தேன். வாஜ்பாய் காலத்தில் இருந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்.

கேள்வி: இந்த நட்பு ரீதியிலான சந்திப்பா? அரசியல் உள்நோக்கம் கொண்டதா?

பதில்: அரசியல்வாதியாக இருப்பதால் அரசியல் ரீதியாக நினைக்கிறீர்கள். இது நட்பு ரீதியிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு. நான் அதற்கு மேல் எதையும் சொல்ல முடியாது. 

கேள்வி: காவிரி விவகாரம், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினாரா?

பதில்: நான் நட்பு ரீதியாக பேசினேன். சுமார் 40 நிமிடம் பேசினோம்.

கேள்வி: தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் துணை முதல் அமைச்சரோ, பொறுப்பு முதல் அமைச்சரையோ நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளதா?

பதில்: அவசியம் கிடையாது. 45 நாட்கள் இராமச்சந்திரா மருத்துவமனையில் கலைஞர் இருந்தார். அப்போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து மடிந்தபோது, தமிழகத்தின் கோடானுகோடி மக்களின் நெஞ்சமெல்லாம் வேதனை நெருப்பாக எரிந்தபோது 45 நாட்கள் மருத்துவமனையில் கலைஞர் இருந்தாரே அப்போது இந்த கேள்வி வந்ததா. இவ்வாறு கூறினார்.

ad

ad