புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2016

மகஜர் கையளிப்புடன் போராட்டம் நிறைவு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில்  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய  கவன ஈர்ப்பு போராட்டம் ஜனாதிபதி, பிரதமருக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவுக்கு வந்தது. 

இந்த மகஜரானது யாழ். பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியத் தலைவர்களினால் யாழ் அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண ஆளுனர் சார்பாக அவரது பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் ஊடாக ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன். மாணவர்களின் இன்றைய போராட்டம் மிகவும் அமைதியான முறையில் முடிவுற்றது.

இதனையடுத்து துண்டிக்கப்பட்டிருந்த ஏ9 வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதுடன் யாழ் மாவட்ட செயலக பணிகளும்  இயல்பு நிலைக்கு திரும்பின.




(2ஆம் இணைப்பு)

ஏ9 வீதியை மறித்து மாணவர்கள் போராட்டம்
 யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவத்திற்கு நீதி கோரி   யாழ் செயலகம்  மற்றும் ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை. 



21

ad

ad