புங்குடுதீவு கண்ணகைபுரம் சைவ இளைஞர் கழகம் ( கனடா ) அனுசரணையில் புங்குடுதீவு உலகமைய கல்விக்கூடத்தில் கல்விபயின்று அண்மையில் நடைபெற்ற புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவி மதுசிகா அவர்களுக்கும் நூறுக்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி பாராட்டும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை காலை பத்து மணியளவில் இடம்பெறவுள்ளது . அனைவரையும் அன்போடு அழைக்கின்றனர் புங்குடுதீவு உலகமையத்தினர் .