புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 பிப்., 2017

வடபகுதிக்கான ரயில் தடம்புரண்டது : யாழ் – கொழும்பு சேவைகள் பாதிப்பு!

எரிபொருள் ஏற்றிச்செல்லும் ரயில் ஒன்று தரம்புரண்டமையினால், வடபகுதிக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்
தெரிவித்துள்ளது.
கொலொன்னாவையில் இருந்து அனுராதபுரம் வரை பயணித்த இந்த ரயில் செனரத்கம மற்றும் தம்புத்தேகம பகுதிக்கு இடையில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
ரயில் பாதையை சீர்படுத்தும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயில் தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.