21 பிப்., 2017

நடிகை அமலாபால் - இயக்குநர் விஜய்க்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்


நடிகை அமலாபால் - இயக்குநர் விஜய் தம்பதிக்கு விவகாரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்.  

அமலாபால் - விஜய் இருவரும் 2014ம் ஆண்டு ஜூன்12ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.  பின்னர் இருவரும்  கருத்து வேறுபாட்டால் பிரிந்த இருவரும் விவாகரத்து கோரி சென்னை எழும்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  மனுவை விசாரித்த நீதிபதி தீபிகா விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.