புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஜன., 2018

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு!


தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து
நிலைகளிலும் பேருந்து கட்டணம் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக கடந்த 2011ல் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் 6 வருடங்களுக்கு பின்னர் கடந்த ஜன.20 ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தி அமைக்கப்பட்டது. இதன் மூலம் பேருந்து கட்டணம் 50 சதவீத்ததில் இருந்து 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பேருந்துக் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு இன்று காலை தடீரென அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, குறைக்கப்பட்ட பேருந்து கட்டணமானது, சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், சொகுசு பஸ்களில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பஸ்களில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ. 4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 ஆக குறைக்கப்பட்டுள்ளது

சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.18 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

மேலும், பேருந்து கட்டண குறைப்பால் நாள் ஒன்றிற்கு ரூ.4 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.