புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2018

இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை! - யாழ்.ஆயர் கோரிக்கை

வேறுபாடுகளை மறந்து இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன என்று யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
வேறுபாடுகளை மறந்து இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன என்று யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல், மிக நீண்ட காலத்தின் பின்னர் ஒரே நாளில் வன்முறைகள் அற்ற நிலையில், மிக அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. தொகுதி வாரித் தேர்தல் முறை 49 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒழிக்கப்பட்டு விகிதாசார கலப்பு முறை தேர்தல் நடைமுறைகளின்படி வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் ஒரு சில இடங்களைத்தவிர கட்சிகள் இணைய வேண்டும் என்ற தேவையையே சுட்டி காட்டி நிற்கின்றன. இதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும். ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற ஆன்றோர் வாக்குக்கு ஒப்ப தமிழ் மக்களின் இன்றைய நிலை - அவர்களின் அவசிய தேவைகள் - முன்னுரிமைகள் என்பவற்றை கவனத்திற் கொண்டு எல்லா வேறுபாடுகளையும் மறந்து தமிழர்கள் என்ற ரீதியில் இணைந்து செயலாற்றுங்கள் என சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தமிழ் மக்கள் பெயரால் வேண்டி நிற்கிறோம்” என தெரிவித்தார்

ad

ad