புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2018

எமது கொள்கையுடன் உடன்படுபவர்கள் இணையலாம்: கூட்டமைப்பு அழைப்பு



தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையுடன் உடன்படக் கூடிய அனைத்து கட்சிகளையும் தங்களுடன் ஒன்றிணையுமாறு
தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக ஏராளமான பொய பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதிலிருந்து மக்கள் மீட்சியடைந்து மிகத் தெளிவுடன் வாக்களித்துள்ளனர்.
வடக்கு- கிழக்கு மக்கள் தங்கள் ஆதரவை எமக்குத் தான் வழங்கியிருக்கின்றார்கள். ஓரிரெண்டு சபைகளைத் தவிர ஏனைய எல்லாச் சபைகளிலும் நாங்கள் தான் வெற்றி பெற்றிருக்கின்றோம்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக ஏராளமான பொய்ப்பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதிலிருந்து மக்கள் மீட்சியடைந்து மிகத் தெளிவுடன் வாக்களித்திருக்கிறார்கள். அவ்வாறு எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எமது கட்சி சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உண்மையில் இந்த தேர்தல் முறை முன்பிருந்த விகிதாரசத் தேர்தலாக அல்லது வட்டாரத் தேர்தலாக இருந்திருக்கும் என்றால் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லாச் சபைகளையும் வடக்கு- கிழக்கு எங்கும் பெற்றிருக்கும். கவலைப்படக் கூடிய விதத்திலே இந்த புதிய தேர்தல் முறை எங்கள் எல்லோரையும் குழப்பிக் கொண்டிருக்கின்றது.
உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. இதில் மஹிந்தவாக இருந்தாலும் சரி ஏனைய தலைவர்களாக இருந்தாலும் சரி புதிய அரசியல் அமைப்புத் தேவை என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டுமாக இருந்தால் அரசியல் தீர்வு என்பது மிகவும் முக்கியமானது என்பதை மிகவும் அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி சபைகளினூடாக பெற்றிருக்கின்ற இந்த வெற்றியை தங்களுடைய தலைகளுக்குள் கொண்டு சென்று மமதை அடையாமல் இனப்பிரச்சனையை தீர்க்கும் வகையில் கூட்டு எதிரணியினர் செயற்பட்டு இதனை முழுமையாக்குவதற்கும் நாட்டை முன்னேற்றம் அடைவதற்கும் ஒத்துழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ad

ad