23 பிப்., 2018

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிiமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பாகவுள்ள நிலையில், இந்த உத்தேச சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுளளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிiமைப் பேரவையின் அமர்வுகள் ஆரம்பாகவுள்ள நிலையில், இந்த உத்தேச சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுளளது.

இந்த உத்தேச புதிய சட்டம் விரைவில் நாடாளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எனினும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு நிகராக புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்தாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.