புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2018

உதவிகள் நிறுத்தப்படும்! - எச்சரித்த இராஜதந்திரிகள்

மைத்திரி, ரணில் நல்லாட்சியை 2020ஆம் ஆண்டு தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள், மஹிந்த ராஜபக்சவின் ஆதரவுடன் புதிய அரசாங்கம் அமையுமானால் உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மைத்திரி, ரணில் நல்லாட்சியை 2020ஆம் ஆண்டு தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள், மஹிந்த ராஜபக்சவின் ஆதரவுடன் புதிய அரசாங்கம் அமையுமானால் உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கியதேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் மற்றும் பிரதான பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கடந்த நான்கு நாட்களாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் தொடர்ச்சியாக பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று இரவும் முக்கிய சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றது என்றும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கூறப்டபட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்து செயற்படுத்துவதற்கு தேவையான உதவிகளை மேற்குலக நாடுகள் வழங்கும் என்றும் அதனால் 2020ஆம் ஆண்டுவரை மைத்திரி ரணில் கூட்டாக ஆட்சி செய்ய வேண்டும் எனவும் ஆலோசணைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகாக்கள் மீண்டும் ஆட்சியில் அல்லது அரசாங்கத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உருவாகிவிடக் கூடாது என மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் எடுத்துரைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

மைத்திரி, ரணில் நல்லாட்சி குழப்பமடைந்து, மஹிந்த ஆதரவுடன் புதிய அரசாங்கம் அமையுமானால் நிதியுதவிகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் ஆதரவுடன் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை செயற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad