புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2018

இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வோம்; மு.க. அழகிரி பேட்டி



இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வோம்; மு.க. அழகிரி பேட்டி தி.மு.க. தலைவர் தேர்தலில் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தது பற்றிய கேள்விக்கு இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வோம் என மு.க. அழகிரி பேட்டியளித்து உள்ளார்.

தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது.

இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம், வேட்பு மனுவை ஸ்டாலின் அளித்துள்ளார். அவருக்கு 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர்.

இதேபோன்று பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தது பற்றி மதுரையில் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஸ்டாலின் தலைவராவதற்கு என்னை முன்மொழிய சொல்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து மு.க. அழகிரி கூறும்பொழுது, இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்வோம். போட்டியிடுவோம் என்று கூறினார்

ad

ad